மரபுவழி வேளாண் விதை திருவிழா
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மரபு வழி வே ளாண் விதை திருவிழா நடந்தது. செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் ஆகியன விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஓய்வு பெற்ற வேளாண் இன்ஜினியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா விதை திருவிழாவை துவக்கி வைத்தார். செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். கருப்பு கவுனி, கார் குறுவை, கிச்சலிசம்பா, மாப்பிள்ளை சம்பா, துாய மல்லி, போன்ற மரபு ரக நெல் ரகங்கள், தானியங்கள், நாட்டு ரக காய்கறி விதைகள், சிறு தானியங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணிகள், கைவினை பொருட்கள், துணி பைகள் மற்றும் விவசாயிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள், இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவித்த இயற்கை வழி உணவு பொருட்களை காட்சிபடுத்தினர். ஏராளமான பொதுமக்கள் இயற் கை விதை மற்றும் உணவு பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.