உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் மரம் விழுந்ததால் கடலுார் அருகே போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்ததால் கடலுார் அருகே போக்குவரத்து பாதிப்பு

கடலுார் : தேசிய நெடுஞ்சாலை விரிவுப்படுத்தும் பணிக்கு மரம் வெட்டும்போது சாலையின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுாரில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு நெடுஞ்சாலை, ரூ. 226 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலுார் அடுத்த பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை 47 கி.மீ துாரத்திற்கு சாலை அகலப்படுத்துதல், சாலை தடுப்பு சுவர் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கிறது. அதற்காக, சாலையோர மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. நேற்று கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியில் மரம் வெட்டும் பணி நடந்தது. மாலை பெரிய மரம் எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தது.இதனால் கடலுார்-விருத்தாசலம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால் பஸ், கார், மோட்டார் பைக் போன்றவைகள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். நடு ரோட்டில் கிடந்த பெரிய மரத்தை அப்புறப்படுத்திய பிறகு வாகனங்கள் செல்ல துவங்கியது.இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை