உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து சீரானது

கஸ்டம்ஸ் சாலையில் போக்குவரத்து சீரானது

நெல்லிக்குப்பம்: பழுதடைந்த கஸ்டம்ஸ் சாலை சீரமைப்பிற்கு பின்னர் போக்குவரத்து துவங்கியது. கடலூரில் இருந்து பகண்டை வரை பெண்ணையாற்றின் கரையில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம் செல்லும் வாகனங்கள் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் நகர பகுதிகளில் போக்குவரத்தில் சிக்காமல் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். கடந்த 21ம் தேதி பெய்த கனமழையால் மருதாடு அருகே சாலையின் குறுக்கே இருந்தபாலம் உள்வாங்கியது.இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சேதமான பாலத்தில் சிமண்ட் பைப்கள் புதைத்து சாலை அமைக்கும் பணி முடிந்ததை தொடர்ந்து, நேற்று முதல் அந்தப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !