உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் கோரிக்கை

 போக்குவரத்து சிக்னல் பொதுமக்கள் கோரிக்கை

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளுர் புதிய பஸ் நிலையம் அருகில் தானியாங்கி போக்குவரத்து 'சிக்னல்' அமைக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுார்-விருத்தாசலம் சாலை, மந்தாரக்குப்பம்-நெய்வேலி டவுன்ஷிப் சாலை, வடக்குவெள்ளுர், வேப்பங்குறிச்சி அருகே மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நான்கு முனை சாலை சந்திப்பில் தினசரி வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதையொட்டி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அங்கு தானியங்கி 'சிக்னல்' அமைக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ