உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரிக்கெட் வீரர்களுக்கு  பயிற்சி துவக்கம் 

கிரிக்கெட் வீரர்களுக்கு  பயிற்சி துவக்கம் 

கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான இலவச பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டரங்கில் துவங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் இலவச பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட 205 பேர் முகாமில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளிக்கிறார். வரும் 21ம் தேதி வரை காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் 6:00 மணி வரையிலும் பயிற்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை