மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
15-Nov-2024
கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், கடலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.கடலுார் ஆர்.டி.ஓ.,அபிநயா தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார்.இதில் கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். வரும் 16, 17 மற்றும் 23, 24 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளிலேயே நடக்கிறது.இதுகுறித்து ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. தேர்தல் துணை தாசில்தார் மோகன், இளநிலை வருவாய்ஆய்வர் ரவி, கணினிஆப்ரேட்டர் முத்துக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024