உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடுபொருட்கள் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருட்கள் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையில் இடுபொருள் தயாரிப்பு குறித்த பயி ற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சுகுமாரன் இயற்கை வேளாண்மை, இயற்கையான முறையில் இடுபொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சி அளித்தார். தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். முன்னோடி விவசாயி முருகன் இயற்கை வேளாண்மையில் இடுபொருள் தயாரிப்பு குறித்த அவரது முன்அனுபவத்தை விவ சாயிகளிடம் பகிர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ