பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வட்டார கல்வி அலுவலர் ஞானவள்ளி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனிமுத்து ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். மாநில பயிற்சியாளர் அரவிந்த், மாநில குழு அழகேசன், மாவட்ட கருத்தாளர்கள் மணிமொழி, கலைமதி ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு கற்றல், கற்பித்தல் குறித்து பயிற்சி அளித்தனர். இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகள் தேர்வு செய்யப்ப ட்டு, அதில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த பயிற்சியில், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியிர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் கனிமொழி ஏற்பாடுகளை செய்திருந்தார்.