உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை

புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை

நெல்லிக்குப்பம்; கடலுார் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் கேனான் நிறுவனம் இணைந்து நெல்லிக்குப்பத்தில் புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்பு நடத்தினர்.மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். நகர தலைவர் சேகர் வரவேற்றார். பயிற்சி வகுப்பை கவுரவ தலைவர் ராமலிங்கம், சட்ட ஆலோசகர் ராஜா துவக்கி வைத்தனர்.கேனான் நிறுவனம் சார்பில் புகைப்பட தொழிலில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினர். நகர செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் ஜெயசீலன், அம்சா பாஸ்கரன், ரீகன்பாபு, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை