உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

கடலுார்: கடலுார் மேற்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. ைஷன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் நிறுவனர் பாபு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் வருமான வரித்துறை அதிகாரி செல்வி, வரி ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். விழாவில், தலைமை ஆசிரியர் எல்லப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் ராம் பிரசாத், மகேஸ்வரி, விவசாய சங்கம் தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், அண்ணாமலை, வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சக்குபாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ