மேலும் செய்திகள்
சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
9 hour(s) ago
சேத்தியாத்தோப்பு: கோதண்டவிளாகம் ஊராட்சியில் மழையால் சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, நாற்று நடும் போராட்டம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கோதண்டவிளாகம் ஊராட்சி தெற்கு தெருவில் சாலை முழுவதும் மழைநீர் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமானது. இதுபற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று மாலை சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சோழத்தரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, 'ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புதிய தார்சாலை அமைத்து தர பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்' என்றனர். இதை தொடர்ந்து போலீசார், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிகாரிகளிடம் மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதன் அடிப்படையில் 10 நாட்களுக்குள் சாலை போட்டுத்தருவதாக உறுதியளித்துள்ளதாக போலீசார் கூறியதன் பேரில் போராட்டம் 5.50 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
9 hour(s) ago