மேலும் செய்திகள்
பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
21-Mar-2025
கடலுார் திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடந்தது.கன்னியாகுமரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த வெள்ளி விழாவில், திருக்குறளுக்காக சேவையாற்றிய, நெய்வேலி மேத்தவாணன் என்பவருக்கு, திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர் விருது மற்றும் 25 ஆயிரம் ரொக்கப்பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு, நெய்வேலி ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் சார்பில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில், வடக்குத்து ரோட்டரி சங்க சாசன தலைவர், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதிய போர்கள் ஓய்வதில்லை நுாலை வழங்கி பாராட்டினார்.பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் தாமோதரன், ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட வன்னியர் சங்க பொருளாளர் கார்த்திகேயன், சுப்பிரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
21-Mar-2025