மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
23-Mar-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் இடையர்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.பள்ளி துவக்கப்பட்டு 104 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நுாற்றாண்டு விழா, 24 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை பணி நிறைவு பாராட்டு விழா, பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். சாமேளன், பாண்டுரங்கன், கார்மேகம் முன்னிலை வகித்தனர்.ஆசிரியை பழனியம்மாள் பணி நிறைவுவை முன்னிட்டு பாராட்டு விழா நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன், மாவட்ட சாரணர் இயக்க செயலர் செல்வநாதன் ஆகியோர் பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியை ேஹமலதா நன்றி கூறினார்.
23-Mar-2025