உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

கடலுார்: கடலுார் மாவட்ட மீனவ கிராமங்களில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடலுார் தேவனாம்பட்டினம் மற்றும், சோனாங்குப்பம், முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவு துாண்களுக்கு சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலுார் மாவட்ட மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

கட்சியினர் அஞ்சலி

சில்வர் பீச் கடற்கரை சுனாமி நினைவு துாணில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மீனவரணி செயலாளர் குப்புராஜ், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், கந்தன், கலைமாறன், வார்டு செயலாளர் ராஜசேகர், பழனிச்சாமி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் வேலவன், கவுன்சிலர் தஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில், மீனவரணி கார்த்திகேயன், நிர்வாகிகள் அன்பழகன், ராஜாராம் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். வி.சி., சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் பங்கேற்றனர்.மீனவர் பேரவை சார்பில் மாநில செயலாளர் கஜேந்திரன் தலைமையிலும், தேசிய மீனவர் கட்சி மாநில தலைவர் சிவராஜ் தலைமையிலும், சிங்கார தோப்பில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினர்.

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை மற்றும் புதுக்குப்பம் சுனாமி நினைவு கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். சாமியார்பேட்டை கிராம தலைவர் நாகலிங்கம், வீராசாமி முன்னிலை வகித்தனர்.நினைவு கல்வெட்டுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., அஞ்சலி செலுத்தினார்.பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில், அன்னங்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன, துணை சேர்மன் முகமது யூனுஸ் மரியாதை செலுத்தினர்.கவுன்சிலர்கள் ஆனந்தன், கணேசமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை