உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி மோதி இரண்டு பேர் பலி

லாரி மோதி இரண்டு பேர் பலி

சேத்தியாத்தோப்பு:அடையாளம் தெரியாத கனரக லாரி மோதி, கிளீனர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.ஆந்திராவில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று முன்தினம் இரவு, மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரியை, ஆந்திர மாநிலம், அங்கம்பாளையத்தை சேர்ந்த ராஜாராவ், 45; ஓட்டினார். பொம்மபள்ளியைச் சேர்ந்த மோகன், 36; கிளீனராக பணியில் இருந்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த மணக்காடு பஸ் நிறுத்தம் அருகே லாரி வந்த போது, டயர் பஞ்சரானது. டிரைவர் ராஜாராவ், லாரியை சாலையோரம் நிறுத்தினார்.அவ்வழியாக சைக்கிளில் வந்த சின்னநற்குணம் வீரன், 58, என்பவரிடம் பஞ்சர் கடை குறித்து ராஜாராவ், மோகன் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கனரக லாரி, அவர்கள் மூன்று பேர் மீதும் மோதி நிற்காமல் சென்றது. பலத்த காயமடைந்த வீரன், மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ராஜாராவ் சேர்க்கப்பட்டார். சேத்தியாத்தோப்பு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை