உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு போலீசாருக்கு கத்திக் குத்து; புதுச்சேரி ஆசாமிக்கு மாவுகட்டு

இரு போலீசாருக்கு கத்திக் குத்து; புதுச்சேரி ஆசாமிக்கு மாவுகட்டு

காட்டுமன்னார்கோவில்; குமராட்சியில் வாகன சோதனையின்போது இரு போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய புதுச்சேரி ஆசாமியை சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். அவர் ஜீப்பிலிருந்து இறங்கியபோது தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தேவநாதன், 38; ஜெயராமன், 43; ஆகிய இரு போலீசார் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம்-திருச்சி சாலையில், வாகன சோதனை செய்தனர். அப்போது சிதம்பரம் நோக்கி பைக்கில் வந்த ஆசாமியை நிறுத்தி சோதனை செய்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பைக் ஆசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியால் இரு போலீசாரையும் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.தேவநாதனுக்கு தலை, கழுத்து, கை ஆகிய இடங்களிலும், ஜெயராமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் (பொறுப்பு) மற்றும் சிறப்பு படை போலீசார் வழக்கு பதிந்து, போலீசாரை கத்தியால் குத்திய ஆசாமியை தேடி வந்தனர். விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் 40; பெயிண்டர் என்பது தெரிய வந்தது. விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். ஜீப்பில் அழைத்து வந்தபோது, கீழே குதித்த விஸ்வநாதனின் கை முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ