உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற இரண்டு வாலிபர்கள் கைது

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.பெண்ணாடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை அகரம் மேற்கு பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண்ணாடம், திருமலை அகரம், பழைய காலனியில் சதீஷ்குமார் என்பவரது வீட்டில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணியளவில் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 700 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சதீஷ்குமார், 23, சென்னை, தண்டையார்பேட்டை, வினோபா நகர் சாகுல் ஹமீது மகன் அப்துல் ஆசிப், 19, சோழன் நகர் சந்திரசேகர் மகன் கோவில்மணி ஆகிய மூவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, சதீஷ்குமார், அப்துல் ஆசிப் இருவரும் பிடிபட்டனர். கோவில்மணி தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து சதீஷ்குமார் உட்பட மூவர் மீது, பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்குமார், அப்துல் ஆசிப் இருவரை கைது செய்தனர். தப்பியோடிய கோவில்மணியை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் சதீஷ்குமாரின் சகோதரர் லாரி டிரைவரான அஜித்குமார் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கிருந்து கஞ்சா வாங்கிவந்து இவர்களிடம் கொடுத்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ