மேலும் செய்திகள்
கால்நடை மருந்தகம் சேதம்
27-Dec-2024
மூடிய கால்நடை மருந்தகம் கால்நடை வளர்ப்போர் அவதி
07-Jan-2025
கடலுார் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தது. கட்டடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனால் புதிய கட்டடம் கட்ட அங்கு மாற்று இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.மாவட்ட அதிகாரிகள் வெள்ளக்கரை ஊராட்சி வி.காட்டுப்பாளையத்தில், கடந்த 2017-18 ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 31 லட்சம் செலவில் புதிய கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமாபுரம் ஊர் பொதுமக்கள் ராமாபுரம் ஊராட்சிக்கு வந்த கட்டடத்தை எப்படி வெள்ளக்கரை ஊராட்சியில் கட்டலாம் என பிரச்னை செய்தனர். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் புதிய கால்நடை மருந்தகத்தை திறக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.வி.காட்டுப்பாளையம் பகுதியில் கால்நடை மருந்தகம் இல்லாத நிலையில் இந்த மருந்தகத்தினை திறந்தால் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெறலாம் என, அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், கடந்த 6 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அரசு பணம் ரூ. 31 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடடம் வீணாகி வருகிறது.
27-Dec-2024
07-Jan-2025