உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

விருத்தாசலம்: நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்,68; இவர், அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.அதன்பேரில், நிலத்தை அளவீடு செய்ய தொரவளூர் வி.ஏ.ஓ.,வான பண்ருட்டி, எல்.ஆர்.,புரம் தனசேகர்,33; ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து வேலாயுதம், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின் பேரில், நேற்று மதியம் 2:00 மணிக்கு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம், ரசாயனம் தடவிய பணத்தை, வேலாயுதம் கொடுத்தார்.அப்போது, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான போலீசார், தனசேகரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி