உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் வி.ஏ.ஓ., சங்கம் விடுப்பு போராட்டம்

சிதம்பரத்தில் வி.ஏ.ஓ., சங்கம் விடுப்பு போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஜேசு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அஜித்குமார், வட்ட பொருளாளர் அருண்ராஜ் முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பது. இவரை தாக்கிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ