மேலும் செய்திகள்
மடுவங்கரை ஊராட்சியில் மருத்துவ முகாம்
15-Sep-2024
விருத்தாசலம் : கம்மாபுரம் அடுத்த அரசகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊமங்கலம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் சரோஜினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார். மருத்துவர் ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் மேனகா விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜா நன்றி கூறினார்.
15-Sep-2024