உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., ஆர்ப்பாட்டம்

வி.சி., ஆர்ப்பாட்டம்

கடலுார்: புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் இளமதி தாக்கப்பட்டதை கண்டித்து, கடலுாரில், வி.சி.கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினார். குற்றவாளியை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் ஸ்ரீதர், கவுன்சிலர் சரிதா, கிட்டு, பிரபாகரன், குமரேசன், ராஜதுரை, சிலம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !