உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி பேனர் விவகாரம்; பண்ருட்டியில் இருதரப்பு மறியல்

வி.சி., கட்சி பேனர் விவகாரம்; பண்ருட்டியில் இருதரப்பு மறியல்

பண்ருட்டி; பண்ருட்டியில் வி.சி., கட்சி பேனர் வைத்த விவகாரத்தில் இருதரப்பினர் சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி, கொக்குப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில், தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்த வி.சி., கட்சியினர் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி பேனர் வைத்தனர். இதற்கு கொக்குப்பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். மேலும், பகல் 12:00 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர், கொக்குப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பேனரை அகற்றக் கோரி சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் தலைமையில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே மர்ம நபர் ஒருவர், கல்வீசி தாக்கியதில் வி.சி., பேனர் சேதமானது. இதனையறிந்த தட்டாஞ்சாவடி காந்தி நகர் வி.சி., கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் பேனரை அகற்றக் கூடாது எனக் கோரி 1:30 மணிக்கு அதே பகுதியில் மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, 2:00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இருதரப்பு மறியல் காரணமாக கடலுார்-உளுந்துார்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ