உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி பாலக்கரையில் வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி பாலக்கரையில் வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புவனகிரி: புவனகிரி பாலக்கரையில் வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் தமிழொளி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சர்தார்கான் வரவேற்றார். மண்டல செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலஅறவாழி முன்னிலை வகித்தனர்.கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், அரசியல் குழு தலைவர் திருவள்ளுவன், சிதம்பரம் லோக்சபா தொகுதி செயலாளர் செல்லப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், வி.சி., கட்சியின் கல்வெட்டை சேதப்படுத்தியவர் மற்றும் கொடி மற்றும் கம்பத்தை அறுத்து எடுத்துச் சென்றவர்களை கைது செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.டி.எஸ்.பி.,க்கள் விஜயகுமார், ராமதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ