உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்சமி நிலங்களை மீட்க கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்

பஞ்சமி நிலங்களை மீட்க கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்

கடலுார்: பஞ்சமி நிலங்களை மீட்க கோரி வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலுார் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க கோரி வி.சி., கடலுார் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்துச்சென்றனர். மனுவில், பட்டியல் இன மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களின் விபரங்களை சேகரித்து, அவற்றை நிலம் இல்லாத பட்டியல் இன மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !