மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
விருத்தாசலம்; திருமாவளவன் கார் மீது பைக் மோதிய சம்பவத்தை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட் சாலையில் வி.சி., கட்சி தலைவர் திருமாளவன் எம்.பி., வந்த கார் மீது ராமநாதபுரம் ராஜிவ்காந்தி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இச்சம்பவத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் 5:30 மணிக்கு சாலை மறியல் செய்தனர். மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் மண்டல செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு, வழக்கறிஞர்கள் சண்முக வேல், தனராஜ், மதுசூதனன் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மறியல் காரணமாக கடலுார், வேப்பூர், பெண்ணாடம் சாலை மார்க்கங்களில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.
16-Sep-2025