உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடையில் நிரம்பியது வீராணம் ஏரி; நீர்வளத் துறை அதிகாரி ஆய்வு

கோடையில் நிரம்பியது வீராணம் ஏரி; நீர்வளத் துறை அதிகாரி ஆய்வு

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள வீராணம் ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. நேற்று முன்தினம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடகாவில் பருவ மழை துவங்கியதால், கல்லணையில் இருந்து கீழணைக்கு முன்கூட்டிய தண்ணீர் திறக்கப்பட்டு, வீராணம் ஏரியில் தேக்கப்பட்டது. இதனால் வீராணம் ஏரி, கோடையிலேயே முழு கொள்ளளவை எட்டியது.இந்நிலையில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜானகி நேற்று ஏரியின் மையப்பகுதியான, கந்தகுமாரன் பகுதியில் ஆய்வு செய்து, நீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பூதங்குடி வி..என்.எஸ்., மதகையும் ஆய்வு செய்து, ஏரியை தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற் பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவராஜ், வெள்ளாறு பாசனப்பிரிவு இளநிலை பொறியாளர் படைகாத்தான் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை