உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலத்தின் உறுதித் தன்மையை பொறுத்து கடலுார் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி

பாலத்தின் உறுதித் தன்மையை பொறுத்து கடலுார் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி

அரியாங்குப்பம்; உள் வாங்கிய, ஆற்றுப் பாலம் சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில், உறுதித் தன்மையை பொறுத்து கடலுார் சாலையில், இன்று வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.புயல் மற்றும் தொடர் கன மழையால், நோணாங்குப்பம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, என்.ஆர்., நகரில் புகுந்து, கடலுார் சாலை, இடையார்பாளையம், சிறிய ஆற்று பாலத்தின் வழியே சீறி பாய்ந்து சென்றதில் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது.இதனால், கடந்த 4ம் தேதி, பாலத்தின் இணைப்பு பகுதி உள்வாங்கியதால், கடலுார் சாலை போக்குவரது துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் வில்லியனுார் வழியாக திருப்பி விடப்பட்டது. பாலம் உள்வாங்கிய இடத்தில் பொதுப்பணித்துறையினர் கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்தனர். இப்பணி நேற்று நிறைவடைந்தது.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,'உள்வாங்கிய பாலத்தின் இணைப்பு பகுதியில், கான்கிரீட் போடப்பட்டுள்ளது. கான்கிரீட் போட்ட பின், குறைந்த பட்சம் 7 நாள் முதல் 28 நாள் கீயூரிங் செய்ய வேண்டும். பிரதான சாலை என்பதால், பொதுமக்களின் நலன் கருதி, கான்கிரீட் செய்த இடத்தில், உறுதி தன்மையை பொருத்து, இன்று வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்' என்றார்.

பயன்பாட்டிற்கு வரவேண்டும்

இடையார்பாளையம் பாலம் உள் வாங்கியதால், கடலுார் சாலை துண்டிக்கப்பட்டது. அருகில் உள்ள பழைய சாலை, வழியாக இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த சாலை இல்லை என்றால், தவளக்குப்பம் பகுதிக்கு செல்ல முடியாமல் போயிருக்கும்.பொதுமக்களுக்கு பெரிதும் கைகொடுத்த, இந்த சாலை மற்றும் சேதமான சிறிய பாலங்களை அரசு சீரமைத்து ஒரு வழி பாதையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி