உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்

 கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்

கடலுார்: புதுச்சேரி சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், கடலுார் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திக்குப்பம் கிராமத்தில் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை புதுச்சேரி சென்ட்ரல் லயன்ஸ் சங்க தலைவர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடபதி, கால்நடை பராமரிப்புத்துறை உதவிஇயக்குனர் வெங்கட்லட்சுமி, கால்நடை மருத்துவர்கள் மகேந்திரன், அழகுமுத்தையன் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர். முகாமில் 250 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, 55 கால்நடைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. 25 மாடுகளுக்கு கருத்தரித்தல் சிகிச்சையும், 25 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது. கால்நடை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கான பசுந்தீவனம், நுண்ணுாட்ட சத்து மருந்து, கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசுகள் லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், பார்த்திபன், ராஜ்குமார், தட்சிணாமூர்த்தி மற்றும் செல்வதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை