மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொல்லை பொதுமக்கள் அச்சம்
30-Sep-2025
சிறுபாக்கம்: சிறுபாக்கம் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிருஷ்ணாபுரம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை சிலர் பிடித்து வந்து, கிருஷ்ணாபுரம் வனத்தையொட்டிய சாலைகளில் விட்டு செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனால், கிராமத்திற்குள் படையெடுக்கும் நாய்கள், சிறு வர்கள், முதியவர்களை கடித்து அச்சுறுத்துகின்றன. இதனால், அப்பகுதியில் நாய் கடியால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சிறுபாக்கம் பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30-Sep-2025