உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

புதுச்சத்திரம்: பூவாலை-குண்டியமல்லுார் சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சத்திரம் அருகே பூவாலை கிராமத்தில் இருந்து குண்டியமல்லுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் தினசரி குறிஞ்சிப்பாடி, வடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர். சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் நடக்கிறது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை