உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய குடிநீர் தேக்க தொட்டி கிராம மக்கள் எதிர்பார்ப்பு

புதிய குடிநீர் தேக்க தொட்டி கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் அடிவாரத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீரத்தேக்க தொட்டி கட்டப்பட்டிருந்தது. இதன் மூலமாக பழையபாளையம், செட்டியார் தெரு, மலையாண்டவர் கோவில் தெரு, மீனாட்சிபேட்டை தெரு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுதடைந்தததால் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்வது என்பது போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. நேரம் விரயமாவதுடன் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.புதிய குடிநீர் தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை