என்.எல்.சி., சுரங்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
நெய்வேலி; என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக வாணாதிராயபுரத்தில் அளவிடு செய்யும் பணி நடந்தது. கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம் சுரங்கம் 1- ஏ விரிவாக்க பணிக்காக வானதிராயபுரத்தில் வீடுகளை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, வீடுகளை கையகப்படுத்த ஒப்புக் கொண்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளை அளவீடு செய்யக் கோரி என்.எல்.சி., நிலம் எடுப்பு அதிகாரிகளிடம் கடிதம் அளித்தனர். அதன்பேரில், கடிதம் அளித்தவர்களின் வீடுகளை மட்டும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முக வள்ளி (நிலம் எடுப்பு) முன்னிலையில் அளவீடு பணி நேற்று நடந்தது. என்.எல்.சி., நிலம் எடுப்புத்துறை அதிகாரிகள் 117 வீடுகளை அளவீடு செய்தனர். டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தென்குத்து கிராமத்தில் அளவீடு பணிக்கு சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, அதிகாரிகள் அளவீடு பணியை கைவிட்டு சென்றனர்.