மேலும் செய்திகள்
பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை
09-Jun-2025
பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா சுவாமி தரிசனம் செய்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் நேற்று நடந்த பா.ம.க., பிரமுகர் இல்லத் திருமண விழாவில், பசுமை தாயகம் தலைவர் சவுமியாக பங்கேற்றார். பின், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவருக்கு 2ம் நிலை ராஜகோபுரத்தில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வீரட்டானேஸ்வரர் மூலவர் அறையில் விளக்கேற்றி, 10 நிமிடம் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். பின் உட்பிரகாரத்தை சுற்றி வந்து புறப்பட்டார். சினிமா இயக்குனர் தங்கர்பச்சான், பா.ம.க., மாவட்டசெயலாளர்கள் ரவிச்சந்திரன், முத்துகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், டாக்டர் கவுரிசங்கர், தாமரைக்கண்ணன் உடனிருந்தனர்.
09-Jun-2025