வாக்காளர் பட்டியல் திருத்தம்; அமைச்சர் வேண்டுகோள்
கடலுார் ; வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் ஈடுபட, கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர், அமைச்சர் பன்னீசெல்வம் விடுத்துள்ள அறிக்கை:கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கம், திருத்தம் செய்ய மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதுதவிர 16,17, 23, 24ம் தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியிலும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலும், கடலுார் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.