உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் உதயகுமார், இன்பேண்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் விஜயகுமாரி, தேர்தல் துணை தாசில்தார் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதில், ஓட்டுபோடுவது நமது கடமை, ஓட்டுபோட பணம் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது. வரும் 23, 24ம் தேதிகளில் நடக்கும் வாக்காளர் சேர்க்கை முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இடமாற்றம் குறித்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.வரும் 28ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ராஜராஜசோழன், பிரகாசம், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், தேர்தல் கணினி உதவியாளர் சுரேஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ