ஓட்டளிப்பு விழிப்புணர்வு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிப்பாளையம் சித்தேரியில், 100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விரலில் மை வைத்து ஓட்டளித்ததை குறிகும் வகையில் கைவிரல் போன்ற அமைப்பில் நின்று உறுதிமொழி எடுத்து, 50 மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலம் தலைமை தாங்கினார். வனத்துறை மாவட்ட அலுவலர் குருசாமி, வனசரகர் ரமேஷ், தாசில்தார் பலராமன், பி.டி.ஓ., மீராகோமதி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, பசுமைதோழர் மணிவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.