விருத்தாசலம் ரவுடி குண்டாசில் கைது
கடலுார் : விருத்தாசலத்தை சேர்ந்த ரவுடி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.விருத்தாசலம் அடுத்த முல்லாதோட்டம், பாலக்கரை இறக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 32; ரவுடியான இவர், மீது விருத்தாசலம் காவல் நிலையத்தில், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.