மேலும் செய்திகள்
கிராம உதவியாளர்கள் போராட்டம்
21-Feb-2026
திட்டக்குடி: திட்டக்குடி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் 5ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வராணி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் தேவி, பாரதி, திருஞானம், பொன்னி முன்னிலை வகித்தனர். நில அளவர் புவனேஸ்வரன், வி.ஏ.ஓ.,க்கள் மணிகண்டன், சிவகுமார், அனிதா, கிராம உதவியாளர் சங்க வட்ட செயலாளர் செந்தில், ராமர், ஜெயராஜ், ராதா, உதவியாளர் சங்கம் வட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் ராமர், பொருளாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது; பணியின்போது இறந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
21-Feb-2026