உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சுவர் விளம்பரங்கள் அழிப்பு

 சுவர் விளம்பரங்கள் அழிப்பு

புதுச்சத்திரம்: மேம்பாலங்கள், சிறுபாலங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் தனியார் மற்றும் அரசியல் கட்சியினர், விளம்பரம் செய்து வருகின்றனர். அதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு திறந்தவெளிகள் உருமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், நெடுஞ்சாலை துறை சார்பில், சுவர் விளம்பரம் அழிக்கும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்த, பூண்டியாங்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை, சுவர் விளம்பரம் அழிக்கும் பணி நடக்கிறது. கடலுார் நிலஎடுப்பு தாசில்தார் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வைத்தியநாதன், டோல் கேட் பி.ஆர்.ஓ., கார்த்திக், சப் இன்ஸ்பெக்டர் வெற்றி, போலீசார் விஷ்ணு பிரசாத், மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி