நீர் மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்
சேத்தியாத்தோப்பு, : கடலுார் மீன்வளத்துறை, சேத்தியாத்தோப்பு அருகே பின்னலுார் கிராமத்தை நீர் மேலாண்மைக்காக தத்தெடுத்து நீர்வரத்து, செலவு சிக்கன கையாளுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது.பின்னலுார் நுாலகம் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மீன் வளத்துறை ஆய்வாளர் அனுசுயா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பிரபுதாஸ், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கார்த்திக், தோட்டக்கலை உதவி அலுவலர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.கிராமத்தின் வரைபடம் வரைந்து நீரோட்டம் , நீர்வரத்து, சிக்கனமாக கையாளுதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் கிராம பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.