உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேத்தியாத்தோப்பு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சேத்தியாத்தோப்பு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு வெள்ளாற்றில் வரும் தண்ணீரை தேக்கி ஏ.டி.சி., மதகை திறந்து வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அதிகாரிகள் திறந்துவிட்டனர்.கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் வெள்ளாறு அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக அணைக்கட்டின் ஷட்டர்கள் அனைத்தும் நேற்று கீழே இறக்கி அடைக்கபட்டது. பின் வெள்ளாறு, மணிமுக்தாறு ஆகியவற்றில் வந்து கொண்டிருக்கும் குறைந்த அளவிலான உபரி நீரை சேத்தியாத்தோப்பு, பின்னலுார், மிராளூர், மஞ்சக்கொல்லை, புவனகிரி, பரங்கிப்பேட்டை வரை நடவு, நேரடி விதைப்பு ஆகிய பகுதிகளில் இரண்டாவது களையெடுப்பு பணிகள், விவசாயிகள் உரமிட்டு வருகின்றனர்.தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சேத்தி யாத்தோப்பு அணைக்கட்டு பாசனப்பிரிவு உதவி பொறி யாளர் படைகாத்தான், பணியாளர்கள் மூர்த்தி, ரமேஷ், கமலக்கண்ணன், லட்சுமணன், செந்தில் ஆகி யோர் ஏ.டி.சி., மதகுகளை திறந்து வெள்ளாறுராஜன் வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட் டனர்.வெள்ளாறுராஜன் வாய்க்கால் மற்றும் வாலாஜா ஏரியிலிருந்து பாசனம் பெரும் வாய்க்கால்களான அரியகோஷ்டி, மானம்பார்த்தான், பழையமுரட்டு வாய்க்கால், மிராளூர் மதகு ஷட்டரை திறந்து பாசனத்திற்கு தண்ணீர் அனுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ