சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு வரவேற்பு
நடுவீரப்பட்டு; பத்திரக்கோட்டைக்கு வந்த சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சரண்யாவை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.கடலுார் மாவட்டம்,பத்திரக்கோட்டையை சேர்ந்த சரவணன்-ஜெயா தம்பதியர் மகள் சரண்யா,26; இவர் கடந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 125 வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். சென்னையிலிருந்து சரண்யா நேற்று மதியம் தனது சொந்த ஊரான பத்திரக்கோட்டைக்கு வந்தார்.பத்திரக்கோட்டைக்கு வந்த சரண்யாவை ஊர் முக்கிய பிரமுகர்களான முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணசுந்தரம்,ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் ஹரிதாஸ்,புதுப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பட்டுராசா, தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் நாகராஜ், சரண்யாவின் தந்தை சரவணன், பாட்டனார்கள் செல்வராஜ்,தேவராசு உள்ளிட்டோர் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.அதனை தொடர்ந்து சரண்யா தமது ஊரில் உள்ள முத்தாலம்மன்,மகா காளியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார்.தமது ஊரிலிருந்து ஒரு ஐ.ஏ.எஸ்.,அதிகாரி உருவாகி உள்ளதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சரண்யாவுக்கு மாலை, சால்வை அணிவித்து கொண்டாடினர்.