உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., முன்னாள் தலைவர் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி

காங்., முன்னாள் தலைவர் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி

புவனகிரி: காங்., முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு, புவனகிரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புவனகிரி ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடத்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் விநாயகம் வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன் மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, நிர்வாகிகள் லட்சுமணன், மாசிலாமணி, ஜோதி முன்னிலை வகித்தனர். காங்., மாநில முன்னாள் தலைவர் அழகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலை மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் சிவப்பிரகாசம், பெருமாள், சங்கர், ராஜா, ராமலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தினர். புவனகிரி தொகுதி செய்தி தொடர்பாளர் சம்பத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !