உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

கடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில், ஜெ.,பிறந்தநாளையொட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிகழ்ச்சி நடந்தது. கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர். நெய்வேலியில் நகரசெயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில், ஜெ., உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம் ஏற்பாட்டில், பஸ்நிலையம் அருகில், எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவித்து, ஜெ., படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு, 1000 பேருக்கு வேட்டி, சேலையுடன் நலத்திட்ட உதவி, 2 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை, மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் வழங்கினார். வடலுாரில் நகர செயலாளர் பாபு ஏற்பாட்டில், பஸ்நிலையத்தில், 1000 பேருக்கு வேட்டி, சேலை, 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடலுார் மற்றும் நெய்வேலி பஸ் டிப்போவில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை