உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேற்கு மாவட்ட பா.ஜ., பயிலரங்கம்

மேற்கு மாவட்ட பா.ஜ., பயிலரங்கம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பயிலரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராகேஷ், சின்னதுரை, அகத் தியர், மாவட்ட பொருளா ளர் சீனு சங்கர், துணை தலைவர்கள் அர்ச்சனா ஈஸ்வர், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் விழுப்புரம் வடக்கு முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் பேசினார். கூட்டத்தில், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு துாய்மைப் பணிகள், ரத்த தானம், கண் சிகிச்சை முகாம், மரக்கன்று நடுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் திருமாவளவன், சிலம்பரசன், மண்டல தலைவர்கள் சுரேஷ்குமார், முருகன், வினோத், லட்சுமி நரசிம்மன், செந்தில்குமார், அரவிந்த், பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட துணை தலைவர் உமாபதி சிவம், இளைஞரணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை