உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கலவர ஓட்டுச்சாவடிகள் எவை? கணக்கெடுக்கும் உளவுத்துறை

 கலவர ஓட்டுச்சாவடிகள் எவை? கணக்கெடுக்கும் உளவுத்துறை

த மிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசின் பதவிக்காலம் வரும் 2026, மே மாதத்துடன் முடிகிறது. 2026 சட்டசபை தேர்தலை துவக்க தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட உளவுத்துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ரகசிய உத்தரவு அனுப்பட்டது. அதில், கடலுார் மாவட்டத்தில் கலவரம், கள்ள ஓட்டு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் எத்தனை என கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட உளவுத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஓட்டுச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும் பார்வையிட்டு, காவல் துறை தலைமைக்கு அறிக்கை அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை