உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வெள்ளத்தால் சேதமான சாலை சீரமைக்கப்படுவது எப்போது?

 வெள்ளத்தால் சேதமான சாலை சீரமைக்கப்படுவது எப்போது?

நெல்லிக்குப்பம்: வெள்ளத்தால் சேதமான கஸ்டம்ஸ் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை, சாத்தனுார் அணையில் திறக்கப்படும் தண்ணீர் பெண்ணையாற்றின் வழியாக ஓடி கடலுாரில் கடலில் கலக்கிறது. கடந்தாண்டு சாத்தனுார் அணையில் இருந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றை ஒட்டி செல்லும் கஸ்டம்ஸ் சாலையில், மேல்பட்டாம்பாக்கம் உட்பட பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது சேதமான இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். ஆனால் ஓராண்டாகியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நிரந்தராக ஆற்றின் கரையை சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போல் ஆற்றில் தண்ணீர் வந்தால் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சேதமான ஆற்றின் கரையை நிரந்தராக சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை