மேலும் செய்திகள்
இருக்கு ஆனா இல்லை மரத்தடியில் பத்திரப்பதிவு
24-Dec-2024
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் இருந்த அரசு துணை சுகாதாரநிலைய கட்டடம் பழுதடைந்தது. இதனால் தற்போது துணை சுகாதார நிலையம் தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சி.என்.பாளையம் பட்டீஸ்வரத்தில் புதிய அரசு துணை சுகாதார நிலையம் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் துணை சுகாதார நிலையம் தொடர்ந்து வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அரசுக்கு வாடகை மூலம் வீண் செலவும் ஏற்படுகிறது. எனவே, கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை திறக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
24-Dec-2024