உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யார் அந்த சார்...? இப்ப கேலியா போயிடுச்சு; சீமான் வேதனை

யார் அந்த சார்...? இப்ப கேலியா போயிடுச்சு; சீமான் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: அண்ணா பல்கலை சம்பவத்தை திசைதிருப்புவதற்கும், தப்பிப்பதற்கும் தான் கவர்னரை எதிர்த்து தி.மு.க., போராட்டம் நடத்தியதாக நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். வடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அண்ணா பல்கலை விவகாரத்தில் 'யார் அந்த சார்' என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் பதிலளித்ததாவது: அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், எட்டப்படுமா? என்பது தான் கேள்வி. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையை, புது பிரச்னையை வந்தால் மறக்கடிக்கப்படுகிறது. அப்படித்தான், ஸ்ரீமதி மரண வழக்கு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் மறக்கக்கடிக்கப்பட்டு விட்டன. பாதிக்கப்பட்ட மாணவியின் எப்.ஐ.ஆர்., குறித்த விபரங்களை சமூக வலைதளங்களில் கசிய விட்டு விட்டனர். யார் அந்த சார் என்பதை, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் விசாரித்தால் தெரிய வரப்போகிறது. ஆனால், அந்த நபர் குறித்த எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. தற்போது, யார் அந்த சார், யார் அந்த சார் என்பது கேலியாகவும், நகைச்சுவையாகவும் ஆகி விட்டது. வலியையும், வேதனையையும் மறந்திட்டு, கடந்து போவதைப் போல் தெரிகிறது. இப்போது, மதுரையில் டங்ஸ்டனுக்கு எதிராக மக்கள் போராட்டம், கவர்னருக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்துறாங்க. கவர்னரை எதிர்த்து நாங்க தான் போராட்டம் நடத்த வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் போராடுகிறீர்கள். 40 எம்.பி.,க்களை வைத்திருக்கும் நீங்கள், பார்லிமென்ட்டில் கவர்னருக்கு எதிராக பேச வேண்டியது தானே. அதை விட்டு விட்டு போராட்டம் ஏன்? போராட்டம் நடத்துறதே, இந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்கும், தப்பிப்பதற்கும் தானே. மத்திய குழு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ரூ.5,000 பொங்கல் என்றார்கள். அப்புறம், ரூ.2,500 என்றார்கள். அப்புறம் ரூ.1,000 என்றார்கள். தற்போது, 103 ரூபாயுக்கு வந்திருக்கு. வெறும் 3 ரூபாயிக்கு வருவதற்குள் நாங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நெற்றியில் ஒத்தை ரூபாயை வைத்து புதைத்து விட்டு சென்று விடுவார்கள். அண்ணா பல்கலை சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கழித்து, சட்டசபையில் முதல்வர் கொடூரம் என்று கூறியது தான் பெருங்கொடூரம். கொடூரம் என்று தெரியும் போது, போராடுபவர்களை கைது செய்தது ஏன்? நீங்கள், கவர்னரை எதிர்த்து எங்க வேண்டுமானாலும் போராட்டம் நடத்தாலாமா?, இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kasimani Baskaran
ஜன 09, 2025 08:27

திராவிடம் என்பதே சின்னக்கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோடாக போட்டு சின்னக்கோட்டை மறக்கடிப்பதுதான். அந்த அடிப்படையில் ஊழலில் ஆரம்பித்து சிறிது சிறிதாக வளர்ந்து இன்று போதைப்பொருள் கடத்தல், பெண்களை கடத்தி கூட்டிக்கொடுத்தல், தீவிரவாத ஆதரவு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிடம் அழிவை நோக்கி பயணிக்கிறது.


D.Ambujavalli
ஜன 09, 2025 06:16

செந்தில் தம்பியைக் கண்டுபிடித்த பிறகுதான் 'சார்' விஷயத்துக்கு வருவார்கள் அதற்குள் பள்ளிச்சசிறுமி மரண மர்மம் வந்துவிட்டது இந்த திராவிட மாடலுக்கு எப்படியெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கிறது, பிரசனைகளிலிருந்து தப்பிக்க


Mohan
ஜன 08, 2025 23:11

ஐயா திரு சீமான் அவர்களே நீங்க நீடுழி வாழ வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். நம்ம தமிழ் நாட்டு சொரணை கெட்ட மக்கள் இந்த கேடு கெட்ட திராவிட விடியல் பொய்யர்கள் காலடியில் கிடக்கிறார்கள் என்பதை நெஞ்சுறுதியுடன் சொல்கிறீர்கள். வாழ்க.. இந்த திராவிட விடியாதவர்கள் அந்தளவு இந்த மதி கெட்ட மக்களை மாற்றி அவர்களது லஞ்ச லாவண்யத்தில் பங்குதாரர்களாக மாற்றி உள்ளனர். கட்சி உறுப்பினர்கள், சிறு, பெரு தலைகள்,அரசு ஊழியர்கள்லட்சக்கணக்கானவர்கள் இந்த அரசுடன் இணக்கமாக இருந்து பங்குப் பணப்பலன் பெற்று லஞ்சத்தின் அடிச்சுவடுகளை மறைத்து அழிப்பது தான் மிகப்பெரும் கொடுமை ருசி பார்த்த தமிழர்களின் குடும்பத்தினர் கேடுகெட்ட லஞ்சப் பணம் வரும் வழி எப்படி என தெரிந்தும், அதில் வாழ்வதை பழகிக் கொண்டுள்ளதால் வெட்கமில்லை. லஞ்சம் வாங்குவதையும் தருவதையும் சாமர்த்தியம் என்று தமிழர்கள் சிலாகிக்கின்றனர். அந்தளவு மக்களை பணத்தாலும் சாராயத்தாலும் அடிமை படுத்தி உள் னர். யாராவது எதிர்த்தால், இருக்கவே இருக்கிறது, """"தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி"""" அளிக்கப்படவில்லை , மற்றும் ""இந்நி எதிர்ப்பு"" கோஷம் சினிமா வினியோகமும், எவரெஸ்ட் போன்ற பண பலமும் கொண்டு சினிமா , ஊடகம் போன்றவற்றை முழுவதும் ஆளுகின்றனர். போதாத குறைக்கு மாவட்ட வாரியாக பணபலம் கொண்ட குறுநில மன்னர்கள் போன்ற மாவட்ட செயலாளர்கள் தமிழ்நாட்டை ஆக்டோபஸ் போல பிடித்துள்ளனர். மிச்ச சொச்சம் அதிகாரத்திற்கு , """பிச்சை ஓட்டுக்கள்""" போட்டு ஆட்சியில் அமர வைப்பதாக தம்பட்டம் அடிக்கும், இத்தாலியில் பிறந்த மதத்தின் மதகுருமார்கள், மற்றும் """அமைதி மார்க்கத்தின் மூர்க்கப் போராளிகள்""" கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போடுவது, இனை எல்லாம் தான் திமுகவின் மமதைக்கு காரணம். இந்த தமிழ் மக்களுக்கு தன்மானம் என்ற தகுதியை இறைவன் தரவில்லை.


சோலை பார்த்தி
ஜன 08, 2025 22:52

யார் அந்த சார்... து. மு வா இருக்குமோ..


Anantharaman Srinivasan
ஜன 08, 2025 22:24

பள்ளியில் படிக்கும் பையனிடம் உங்க சாரு யாரு என்று கேட்பதைப்போல் குற்றவாளி ஞானசேகரனிடம் உங்க சார் யாரு என்று special மரியாதை கொடுத்து கேட்டால் உண்மை வரும்.


Priyan Vadanad
ஜன 08, 2025 21:17

முற்றிலும் உண்மை. ஆக்கபூர்வமில்லாத இவர்களது போராட்டம் இப்போது கேலி பொருளாகிவிட்டது. யாரு அந்த சாரு? நான்தான் அந்த சாரு என்று கேலி செய்யும் அளவுக்கு இந்த போராட்டத்தை இந்த பாவிகள் நீர்த்து போக செய்து வருகிறார்கள் .


Priyan Vadanad
ஜன 08, 2025 21:12

மணிப்பூரில் வருடங்களாக நடந்து வருவது கொடூரம் என்று ஒருவர் இன்றுவரை சொல்லவில்லையே சீமான் சார் அது பற்றியும் ஒரு போடு போடுங்கள்.


Svs Yaadum oore
ஜன 08, 2025 21:36

விடியலுக்கு மத சார்பின்மையாக மணிப்பூர்தான் நினைவுக்கு வரும்... மணிப்பூரில் தான் தமிழனுங்க வாழறானுங்க ... முள்ளிவாய்க்கால் பற்றி கனியக்காவுக்கு எத்தனை முறை நினைவுக்கு வந்துள்ளது ??....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 08, 2025 21:57

உங்க வீட்டு பிரச்சனையை பேசுங்க பிரியன்...கோடி வீட்டு குப்பனுக்கு இடுப்பு வலின்னு உனக்கு தெரியுமா... உனக்கெதுக்கு வீண் வேலை....அங்கு நடப்பதை அந்த வீட்டுக்காரங்க பாத்துப்பாங்க....!!!


N Annamalai
ஜன 08, 2025 20:50

பிரச்சனையை மடை மாற்றம் செய்கிரார்கள் என்று இவர் ஒருவர் தான் சொல்கிறார் .உன்னிப்பாக கவனித்தால் இவர்கள் சொல்லி கவர்னர் நடக்கிறார் போல் தெரிகிறது .பாவம் மக்கள் .


Mohanakrishnan
ஜன 08, 2025 20:48

மக்களுக்கு தெரியும் .ஆனால் ஒருவருக்கு தெரியாது யார் அந்த சார்


தாமரை மலர்கிறது
ஜன 08, 2025 20:34

திராவிட கலாச்சாரத்தை எதிர்க்கும் சீமானிற்கு பாராட்டுக்கள்.


முக்கிய வீடியோ